குடிசை எரிந்து ரூ.15 லட்சம் நாசம்... கருகிய வீடு கனவு; கதறி அழுத பத்திரப்பதிவு எழுத்தாளர்


எரிந்து ரூ.15 லட்சம் நாசம்

வீடு கட்ட வேண்டுமென சேர்த்து வைத்திருந்த 15 லட்சம் ரூபாய் நோட்டுகள் தீயில் கருகியதால், பத்திரப்பதிவு எழுத்தாளரின் கனவு நாசமாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த செய்யூரில் பத்திரப்பதிவு எழுத்தாளராக வேலை செய்து வருபவர் செய்யூர் பாளையர் மடம் பகுதியை சேர்ந்த தியாகு. இவர் தன்னுடைய அண்ணன் வீட்டு மாடியில் குடிசை அமைத்து அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவர் நேற்று கர்ப்பிணியாக இருக்கும் தன்னுடைய மனைவியை மருத்துவ பரிசோதனைக்காக மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். நேற்று பகல் 12 மணி அளவில் அவருடைய குடிசை மின்கசிவு காரணமாக முழுவதும் எரிந்து சாம்பலானது.

குடிசையில் இருந்து வரும் தியாகு கான்கிரீட் வீடு கட்டுவதற்காக ரூ.15 லட்சம் வைத்திருந்தார். அங்கு இருந்த ரூ.15 லட்சம், 15 பவுன் நகை, வீட்டு மனை ஆவணம், சான்றிதழ்கள், வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகியது. இது குறித்து தியாகு செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த ரூ.15 லட்சம் கருகியதைக் கண்டு வேதனை அடைந்த தியாகு கதறி அழுதது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் வாசிக்கலாமே...

இளம்பெண் தற்கொலை... ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம்!

குட்நியூஸ்... தமிழக அரசில் 368 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்!

x