கணவனின் குடிப்பழக்கத்தைப் பொறுக்க முடியாமல் ரயிலில் விழுந்து மனைவி தற்கொலை செய்யச் சென்றார். அவரை கணவர் சமாதானம் செய்து கொண்டிருந்த போது வேகமாக வந்த ரயில் மோதி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியைச் சேர்ந்தவர் கோவிந்த்் சோங்கர்(30). பழ வியாபாரி. இவரது மனைவி குஷ்பு(28). குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோவிந்த்தால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. வழக்கம் போல கணவன், மனைவிக்கிடையே நேற்றும் தகராறு ஏற்பட்டது. என்ன சொன்னாலும், மது குடிக்கும் பழக்கத்தை விட மறுக்கிறாரா என்ற சோகத்தில் தற்கொலை செய்வதற்காக குஷ்பு, பஞ்ச்கோஷி ரயில்வே கிராசிங்கிற்குச் சென்றார்.
அவரைச் சமாதானப்படுத்துவதற்காக கோவிந்த் சென்றார். ரயில் தண்டவாளத்தில் நின்ற மனைவியை அணைத்து கோவிந்த் சமாதானம் செய்து கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து சாராநாத் காவல் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் பிரிஜேஷ் குமார் சிங் கூறுகையில்," கோவிந்த் தனது மனைவியைச் சமாதானப்படுத்தும் போது வேகமாக வந்த ரயில் மோதி இருவருமே பலியாகியுள்ளனர். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன" என்றனர்.
தம்பதியரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மனைவியை சமாதானம் செய்யச் சென்ற இடத்தில் அவருடன் சேர்ந்து கணவரும் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இளம்பெண் தற்கொலை... ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம்!
குட்நியூஸ்... தமிழக அரசில் 368 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்!