இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் சராசரியாக 3 நிமிடங்களுக்கு ஒருவர் பலியான விவரம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகள், இறப்புகள் மற்றும் காயங்கள் பற்றிய தரவுகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டுக்கான விபத்து பற்றிய விவரங்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிபரத்தில், 2022-ல் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.68 லட்சத்தைத் தாண்டியுள்ளன. நாளொன்றுக்கு சுமார் 462 பேர் என ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒருவர் சாலை விபத்தில் இறப்பதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2023-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் நிகழும் விபத்துகள் பாதியாகக் குறைக்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், சாலை விபத்துகளால் தொடர்ந்து இறப்புகள் அதிகரிப்பது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. கடந்த 2021-ஆண்டோடு ஒப்பிடும்போது 2022-ல் இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 9 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-ல் தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டில் சுமார் 11.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!