மிட்டாய் கொடுத்து 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - தெருவோர வியாபாரி போக்சோவில் கைது


பிந்த்: மத்தியப் பிரதேசத்தில் எட்டு வயது சிறுமிக்கு, மிட்டாய் தருவதாக வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தெருவோர வியாபாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிந்த் மாவட்டத்தின் கோஹாட் நகரில் சனிக்கிழமை இரவு 8 வயது சிறுமியிடம் பருத்தி மிட்டாய் கொடுத்துள்ளார் தெருவோர வியாபாரி ஒருவர். அதன் பின்னர் அவர் அச்சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் சிறுமிக்கு ரூ.20 கொடுத்து அனுப்பியுள்ளார்.

சிறுமியிடம் 20 ரூபாயை பார்த்ததும், அவரது தாயார் விசாரித்தபோது, ​​நடந்த சம்பவம் குறித்து சிறுமி தன் தாயாரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் போக்சோ சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அசித் யாதவ் தெரிவித்தார்.

x