தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டியில் 2011-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர் சந்தரையா. இவர் அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரிடம் சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக, அந்த விவசாயி அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
அதில், சந்தரையா லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்படுவதாக நீதிபதி செல்வகுமார் தீர்ப்பு வழங்கினார்.