'தனியாக வா ஜாலியாக இருக்கலாம்'...9-ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர்!


செல்போன்

வாட்ஸ் அப்பில் 9-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன்

உத்தரப்பிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்குள்ள பள்ளியின் ஆசிரியராக இருப்பவர் ரோஹித் குமார் லோதி, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலையாய் காதலித்துள்ளார்.

இதனால் அந்த மாணவியிடம் பேசி பழகியுள்ளார். இதனால் அந்த மாணவிக்கு அதிக மதிப்பெண்களையும் வழங்கியுள்ளார். அத்துடன் அந்த மாணவியின் செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் அன்றாடம் அரட்டையடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், திடீரென மாணவிக்கு வாட்ஸ் அப்பில் விடுமுறை நாளில் பள்ளிக்கு வந்தால் பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொள்ளலாம் என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். அத்துடன் இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். அத்துடன் இதுபோல தினசரி, ஆசிரியர் ரோஹித்குமார் லோதி, அந்த மாணவிக்கு வாட்ஸ் அப் மூலம் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்.

தொல்லை

இந்தநிலையில், கடந்த 7-ம் தேதி இதே போல வாட்ஸ் அப் மூலம் மாணவிக்கு ஆசிரியர் ரோஹித் குமார் லோதி, ஆபாச மெசேஜ்களை அனுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த மாணவி, ஆசிரியர் அனுப்பிய அனைத்து ஆபாச மெசேஜ்களையும் ஸ்கீரின் ஷாட் எடுத்து தனது பெற்றோரிடம் காண்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், ஆசிரியர் ரோஹித்குமாரிடம் கேட்டதற்கு, அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் ஆசிரியர் ரோஹித் குமார் மீது மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது அவர்களின் நண்பர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட ஆசிரியர் ரோஹித்குமார் லோதி, புகார் அளிக்கக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து போலீஸில், மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் ஆசிரியர் ரோஹித்குமார் லோதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் ஹமிர்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x