சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!


ஜிம் பயிற்சியாளர்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஆணகழன் போட்டியில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம் பயிற்சியாளர்

சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். அந்த பகுதியில் உள்ள ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்பதற்காக தொடர்ச்சியான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், கொரட்டூரில் உள்ள ஜிம்மில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த குளியறைக்கு சென்று குளித்துள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி சரிந்துள்ளார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், யோகேஷ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

உயிரிழந்த யோகேஷிற்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு ஜிம் பயிற்சியாளர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x