உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதன பெட்டியில் மருத்துவர் தம்பதி மீது இளைஞர் ஒருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மூத்த குடிமக்கள் தம்பதியர் குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்துள்ளனர். இந்த பெட்டியில் இருந்த 20 வயது இளைஞர் ஒருவர், அந்த தம்பதியர் மீதும் அவர்களது உடமைகள் மீதும் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அந்த தம்பதியர் அதிர்ச்சியடைந்தனர். லட்சுமிபாய் ஜான்சி ஸ்டேஷனுக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த இளைஞர் சக பயணிகள், டிடிஇயால் எச்சரிக்கப்பட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அவர் அப்போது குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. அவர் டெல்லியில் உள்ள குதுப் விஹாரைச் சேர்ந்த ரித்தேஷ் என்பது தெரிய வந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் இருந்து அவர் ரயிலில் ஏறியதும் தெரிய வந்தது.
அவர் மீது ரயில்வே சட்டம் பிரிவு 145-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் ஜாமீனும் வழங்கப்பட்டது. அவர் சிறுநீர் கழித்த மூத்த குடிமக்களில் ஒருவர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பயணியாற்றி ஓய்வு பெற்ற எலும்பியல் மருத்துவர் ஆவார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," கனவில் கூட இப்படி நடக்கும் நாங்கள் கருதவில்லை.நாங்கள் அப்போது நாங்க்ள் ரயிலை நரகமாக உணர்ந்தோம் "என்றார். ஓடும் ரயிலில் பயணிகள் மீது இளைஞர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்