இன்னும் 39 தோட்டாக்கள் காத்திருக்கின்றன... ஆசிரியரை சுட்ட மாணவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!


கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

ஆக்ராவில் ஆசிரியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் இன்னும் 39 தோட்டாக்கள் ஆசிரியருக்குக் காத்திருக்கின்றன என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள மலுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித் ராம்ஸ்வரூப். இவர் ஆசிரியராக பணிபுரிகிறார். மேலும், பள்ளி நேரத்திற்குப் பிறகு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.

நேற்று அவர் பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டிருந்த போது இரண்டு மாணவர்கள் வெளியே அழைத்துள்ளனர். இதனால் அவர் பயிற்சி வகுப்புக்கு வெளியே சென்ற போது திடீரென அந்த மாணவர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி விட்டனர். இந்த சத்தத்தைக் கேட்ட மற்ற மாணவர்களும், அருகில் இருந்த ஆசிரியர்களும் ஓடி வந்து காயமடைந்த ஆசிரியர் சுமித்தை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தோட்டா அவரது காலில் பாய்ந்துள்ளதால் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்

கைது செய்யப்பட்ட மாணவர்

இந்த நிலையில், ஆசிரியரை சுட்ட மாணவர்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் 6 மாதங்களுக்குப் பிறகு மேலும் 39 தோட்டாக்கள் ஆசிரியருக்கு காத்திருக்கின்றன என்று பேசியுள்ளனர்.

இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்திய போலீஸார், துப்பாக்கியால் சுட்ட இரண்டு சிறுவர்களை இன்று கைது செய்தனர். அவர்கள் வீடியோ வெளியிட்ட சமூக வலைதளக்கணக்கையும் முடக்கினர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, எதற்காக ஆசிரியரை சுட்டனர் என விசாரித்து வருகின்றனர்.

ஆசிரியரை சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஆக்ராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

x