பகீர்...மெட்ரோ ரயில் முன் பாய்ந்த இளைஞர்: தந்தை இறந்த சோகத்தால் எடுத்த விபரீத முடிவு!


மெட்ரோ ரயில்

பெங்களூருவில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம்

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஜலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது- நேற்று மாலை இந்த ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் வந்து கொண்டிருந்தது.

அப்போது 23 வயது இளைஞர் ஒருவர் திடீரென மெட்ரோ ரயில் பாதையில் குதித்தார். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர் ரயிலில் பாய்வதைக் கண்ட லோகோ பைலட், அவசரமாக ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால், அந்த இளைஞர் ரயிலில் அடிபட்டார்.

மெட்ரோ ரயில்

இதையடுத்து மெட்ரோ ஸ்டேஷனில் இருந்த பாதுகாப்பு பணியாளர்கள், அவசர கால பயண முறையைப் பயன்படுத்தி பாதையில் இருந்த மின்சாரத்தை நிறுத்தினர். அத்துடன் மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை முயன்ற இளைஞரைமீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் பயஷ்வந்தபூர் மற்றும் நாகசந்திரா இடையேயான மெட்ரோ ரயில் சேவை சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் முன் இளைஞர் குதித்த விவகாரம் குறித்து பீன்யா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆலப்புழா

மெட்ரோ ரயில் முன் பாய்ந்தவர் கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த ஷரோன்(23) என்பது தெரிய வந்தது. தனது நண்பர் ராகேஷீடன் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஷரோன் வந்துள்ளார். அப்போது தான் அவர் ரயில் முன் பாய்ந்தது தெரிய வந்தது.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தந்தையை இழந்த ஷரோன், 15 நாட்களுக்கு முன்புதான் பெங்களூரு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக ஷரோன், மெட்ரோ ரயில் முன் பாய்ந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேதிக்கின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பசுமை வழித்தடத்தில் ரயில் சேவைகள் இரவு 8 மணியளவில் மீண்டும் தொடங்கப்பட்டன. மெட்ரோ ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஜலஹள்ளி ரயில் நிலைய பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது,

இதையும் வாசிக்கலாமே...

x