பகீர்... ஓட்டக் கற்றுக்கொடுத்த மகன்; கார் கிணற்றில் பாய்ந்து தந்தை உயிரிழப்பு


கார் கிணற்றில் பாய்ந்து தந்தை உயிரிழப்பு

தந்தைக்கு மகன் கார் கற்றுக் கொண்டிருந்தபோது கார் கிணற்றுக்குள் பாய்ந்து விழுந்ததில் தந்தை உயிரிழந்த சோக சம்பவம் நாமக்கல்லில் நடந்திருக்கிறது.

நாமக்கல் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கோபி. இவர் தனது தந்தை ராஜேந்திரனுக்கு நேற்று கார் கற்றுக் கொடுத்திருக்கிறார் அப்போது காரை பின்புறம் எடுப்பதற்கு பதிலாக தவறுதலாக முன்னோக்கி செலுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த விவசாய கிணற்றின் தடுப்பை உடைத்து உள்ளே கவிழ்ந்தது. இதில் கோபி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவரது தந்தை ராஜேந்திரன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிணற்றில் பாய்ந்த கார்

இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை, ராஜேந்திரனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரையும் உயிரிழந்த ராஜேந்திரன் உடலையும் தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் கார் கற்று கொடுக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தந்தை உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

x