4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை; இழப்பீடு கோரும் பெண்கள்!


கருத்தடை

ஐரோப்பாவில் பூர்வக்குடி மக்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் வகையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்த விவகாரம் பல ஆண்டுகள் கழித்து தற்போது அந்த அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

ஐரோப்பாவில் 1960 காலகட்டத்தில் பூர்வகுடி மக்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சுமார் 4,500 பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதில் சிலர் இளம் பெண்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறி 70 வயதைக் கடந்த 67 பேர் தற்போது அரசாங்கத்திடம் இழப்பீடு கோரியுள்ளனர். தலா 300,000 kroner தொகையை (34,880 பவுண்டுகள்) இழப்பீடாக அளிக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

பூர்வகுடி மக்களிடையே கட்டாய கருத்தடை முன்னெடுக்கப்பட்ட சம்பவம், கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் 13 வயது சிறுமிகளுக்கும் ஐடியூஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டுவர டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசாங்கங்களால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் முடிவுகள் 2025ல் வெளியிடப்படும் என்றே கூறப்படுகிறது. ஆனால் ஏற்கெனவே தாங்கள் வயதானவர்கள் என குறிப்பிட்டு, இப்போதே இழப்பீடு வழங்க வேண்டும் என 67 பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x