பேரையூர் அருகே வீட்டுமனை பட்டாவுக்கு ரூ.6,000 லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது


மீனாட்சி கலை

மதுரை: பேரையூர் அருகே வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்க ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம், சின்னரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் மொகைதீன் செரீப். இவரது பெற்றோர் பெயரில் சின்னரெட்டிப்பட்டியில் இரு வீட்டு மனைகள் உள்ளன. இதற்கு பட்டா வாங்க திட்டமிட்டு, சின்னரெட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் டிஎம்டி. மீனாட்சிகலையை செரீப் அணுகியுள்ளார். பட்டா வழங்க விஏஓ ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இத்தொகையை கொடுக்க விரும்பாத மொகைதீன் செரீப் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறையினரின் யோசனையின்படி, அவரது அலுவலகத்தில் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை செரீப் அலுவலக உதவியாளரிடம் கொடுத்த அந்த பணத்தை வாங்கி விஏஓ மீனாட்சி கலை தனது பேக்கில் வைத்தார். அப்போது, அருகில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யசீலன் தலைமையிலான ஆய்வாளர்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு உள்ளிட்ட போலீஸார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சம் வாங்கி பெண் விஏஓ கைது செய்யப்பட்ட சம்பவம் பேரையூர் தாலுகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x