இளம் பெண்ணை மிரட்டி ரூ.3.64 லட்சம் பறித்த கேரள இளைஞர்கள் கைது


சென்னை: மும்பை போலீஸ் எனக் கூறி இளம்பெண்ணிடம் ரூ.3.64 லட்சம் பறித்த2 கேரள இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மயிலாப்பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சென்னை கிழக்குமண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், ‘மும்பை சைபர் க்ரைம்புலனாய்வு அதிகாரி பேசுகிறேன். மும்பை கிளையில் உள்ள ஒருகூரியர் நிறுவனத்துக்கு உங்களது ஆதார் கார்டை உபயோகித்து ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் சட்டத்துக்கு புறம்பான போதை பொருள் உள்ளது. உங்களை கைது செய்ய உள்ளோம்.

உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை, முறையற்ற பணம் என நிரூபிக்க நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் அனுப்ப வேண்டும்.

விசாரணை முடிந்து நீங்கள் நிரபராதி என தெரியவந்தால் அந்த பணத்தை உடனடியாக திருப்பி அனுப்பி விடுவோம்’ எனக் கூறி ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்தை இணையபரிவர்த்தனை மூலம் பெற்றுள் ளனர். அதன் பிறகு தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து ஏமாற்றப் பட்டதை உணர்ந்த அப்பெண் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து மும்பை போலீஸ் என கூறி பெண்ணிடம் பணம் பறித்ததாக கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த நிதின் ஜோசப் (31), அதே பகுதியைச் சேர்ந்த ரமீஸ் (31) ஆகிய இருவரை கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

x