கொலை, கஞ்சா வழக்கு: இருவர் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்


கொலை, கஞ்சா வழக்கு

திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே சொக்கிப்பட்டியைச் சேர்ந்தவர் வையப்பன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (50) என்பவரை கடந்த ஆண்டு கொலை செய்தார். இவரை இடையகோட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொடைக்கானல் அப்சர் வேட்டரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (எ) நாகராஜ் (31). இவர் அப்பகுதியில் கடந்தாண்டு கஞ்சா விற்றபோது கொடைக்கானல் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி. பாஸ்கரன் பரிந்துரைத்தார். இதன்படி திண்டுக்கல் கலெக்டர் விசாகன் உத்தரவில் சக்திவேல், சதீஷை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

x