புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து


புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே இன்று, சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே இன்று காலை சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று காலை 8.30 மணியளவில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. சரக்கு ரயில் தடம் புரண்டதால், அருகில் உள்ள தண்டவாள வழித்தடத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே குழுக்கள் விரைந்துச் சென்று சீரமைப்புப் பணியில் ஈடுபட்டன. இந்த விபத்து தொடர்பாக, கிழக்கு கடற்கரை ரயில்வே கோட்ட மேலாளர் எச்எஸ் பஜ்வா கூறுகையில், "புவனேஸ்வர் ரயில் நிலைய யார்டில் மட்டுமே ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

அந்த சரக்கு ரயில் அங்கூல் நோக்கி சென்றபோது விபத்து நேர்ந்தது, இரண்டு வேகன்கள் தடம் புரண்டன. ஏற்கெனவே ஒரு வேகன் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது. மற்றொரு வேகனும் விரைவில் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்படும்" என்றார்.

x