தம்பியின் மனைவிக்கு பாலியல் தொல்லை: பெண்ணின் புகாரால் போலீஸ் அதிரடி


சிவகாசி அருகே கணவரை பிரிந்து வாழும் கொழுந்தியாளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணவரின் அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை கடந்த 2 மாதங்களாக பிரிந்து குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வருகிறார். இவரது கணவரின் அண்ணனும் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கொழுந்தியாளின் வீட்டு கதவை இரவு நேரங்களில் தட்டி அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு மறுத்த அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்து வந்தார்.

இது குறித்து போலீசில் அப்பெண் புகார் கொடுத்தார். இதனடிப்படையில், திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், அவர் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த புதுராஜா (50) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து தொடரந்து விசாரித்து வருகின்றனர்.

x