திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை!


சிறை தண்டனை

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ரகுநாத பாண்டி, (28). கடந்த 2021ல் இவர், 17 வயது சிறுமியை திருமணம் கொள்வதாக ஆசை வார்த்தை பேசி பாலியல் வன்புணர்வு செய்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ரகுநாதபாண்டியை போக்சோ வழக்கில் திண்டுக்கல் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. குற்றவாளி ரகுநாதபாண்டிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

x