ரூ.3.5 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்: விமான நிலையத்தில் பரபரப்பு


பெங்களூருவில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சாவை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து இந்த கஞ்சாவை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருவேறு வழக்குகளில் 5 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சந்தன மரங்கள் மற்றும் ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகரில் சந்தன மரக்கடத்தல் வியாபாரம் மீண்டும் தொடங்கியுள்து. இந்த நிலையில், கே.ஆர்.புராவில் உள்ள ஐடிஐ தொழிற்சாலை வளாக குடோனில் சந்தன மரம் பதுக்கி வைத்திருப்பதாக மாநில வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு வனத்துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரண்டு டன்னுக்கும் அதிகமான சந்தன மரங்களை எப்படி சேகரித்தார்கள்? சட்டவிரோத சந்தன மரங்கள் எப்படி அரசு தொழிற்சாலைக்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் தேவனஹள்ளி அருகே கெம்பேகவுடா விமான நிலையத்தில் 3.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டில் சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த ஷஹான்சா சாகுல் அகமது கைது செய்யப்பட்டுள்ளார். பாங்காக்கில் இருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் லக்கேஜ் பையில் மறைத்து இந்த கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹைட்ரோபோனிக் கஞ்சா சந்தையில் மிகவும் விலை உயர்ந்தது. சூரிய ஒளி இல்லாத குளிர் பிரதேசங்களில் இந்த கஞ்சா வளர்க்கப்படுகிறது.

ஹைட்ரோபோனிக் கஞ்சா சந்தையில் முதல் தரமான கஞ்சா என்று அழைக்கப்படுகிறது. இந்த கஞ்சாவை பணக்காரர்கள் தான் பெரும்பாலும் வாங்குகிறார்கள் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

x