மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் 6 வயது மாணவனை, கையெழுத்து சரியில்லை என்ற காரணத்தால் அடித்ததாகப் பள்ளி ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புனேவைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவனின் "மோசமான" கையெழுத்தால் கோபமடைந்த ஆசிரியர், அக்டோபர் 20-ம் தேதி பள்ளியில் அந்த சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தை குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்று ஆசிரியை குழந்தையை மிரட்டியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வான்வாடி காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) கீழ் ஆசிரியர் மீது அடையாளம் காண முடியாத (NC) குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.