9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: விசாரணை வளையத்தில் 15 வயது சிறுவன்


மகாராஷ்டிராவில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 15 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

மகாராஷ்டிராவில் இன்று காலையில் கல்யாண் ரயில் நிலையத்தில் 9 வயது சிறுமி பலத்த காயமடைந்து கிடப்பதை உள்ளூர்வாசிகள் பார்த்தனர். உடனடியாக போலீஸார் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

சிறுமியின் பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றச்சாட்டின் பேரில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி பேசிய காவல்துறை டிசிபி சச்சின் குஞ்சல், "சந்தேகத்திற்கிடமான அடிப்படையில் நாங்கள் ஒரு சிறுவனை காவலில் வைத்துள்ளோம். சிறுவனுக்கு எதிராக இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, விசாரணை நடந்து வருகிறது. போக்சோ பிரிவின் கீழ் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

x