கோவை கார் வெடிப்பு: இன்று விசாரணையைத் தொடங்குகிறது என்ஐஏ!


கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் அருகே கார் வெடித்த சம்பவம் தொடர்பாக, தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளின் விசாரணை இன்று தொடங்குகிறது.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணியளவில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் உக்கடம் ஜி.எம் நகரைச் சேர்ந்த ஜமேஷா முபீன்(25) என்ற இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பிரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழகக் காவல் துறை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தாங்கள் சேகரித்த மொத்தத் தகவலையும் தனிப்படையினர் கொடுத்துவிட்ட நிலையில் இவ்வழக்கில் இன்றுமுதல் தங்கள் விசாரணையை என்ஐஏ தொடங்குகிறது. இதற்காக அதிகாரிகள் குழு ஒன்று கோவையில் முகாமிட்டுள்ளது.

x