முன்விரோதம் காரணமாக மளிகைக் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள புல்லுவிளையைச் சேர்ந்தவர் பால் பாண்டியன்(67). இவர் பேயன்குழி எனும் பகுதியில் மளிகைக் கடை நடத்திவருகிறார். இவருக்கும் பூமிநாதன் தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அஜி (43) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்தது.
இந்நிலையில், பால் பாண்டி தனக்கு 4 லட்ச ரூபாய் தர வேண்டும் என அஜி அவரது கடைக்குச் சென்று தகராறு செய்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் பால் பாண்டியனை அரிவாளால் வெட்டினார். இதில் அவரது இடது கையிலும் முதுகிலும் வெட்டு விழுந்தது. இதுகுறித்து பால் பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் அஜி கைது செய்யப்பட்டார்.
கொலை முயற்சி வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.