ஊருக்குச் செல்வதாகச் சொல்லிச் சென்ற இரும்பு வியாபாரி சடலமாக மீட்பு!


கொலை

மூன்று நாட்கள் வெளியூருக்குச் செல்வதாகச் சொல்லிச் சென்ற இரும்பு வியாபாரி கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், வட்டாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்க ராஜன்(45). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்துவந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலையில், அருகே உள்ள காட்டுப் பகுதியில் முத்துராமலிங்க ராஜன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். முத்துராமலிங்க ராஜன் தொழில் விஷயமாகக் கோயம்புத்தூருக்குச் செல்ல வேண்டும் என தன் அம்மாவிடம் 3,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் இல்லை எனச் சொன்னார். அப்போது அவர் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் பணம் கொடுத்து உதவியுள்ளார். அதை வாங்கிய முத்துராமலிங்க ராஜன், ‘மூன்று நாட்கள் கழித்துத்தான் ஊருக்கு வருவேன். கோயம்புத்தூருக்குச் செல்கிறேன்’ என சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனால் அவர் கையில் இருந்த பணத்தைப் பறிக்கும் நோக்கத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனும் கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x