கோவை முதல் குமரிவரை தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு: அச்சத்தில் உறைந்த மக்கள்!


பெட்ரோல் குண்டு

தேசிய புலனாய்வு முகமையின் சோதனைக்குப் பின்பு தமிழகத்தில் பாஜகவினரின் இல்லங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கோவை, மதுரையைத் தொடர்ந்து கன்னியாகுமரியிலும் நேற்று நள்ளிரவு மர்பநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரியில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் வியாழக் கிழமை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் மேற்கு நகரத் தலைவர் செந்தில் பால்ராஜின் கார் செட்டிற்கு மர்மநபர்கள் தீவைத்தனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சிவசேகரின் காரை மர்மநபர்கள் தீவைத்துக் கொளுத்தினர். கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ரத்தினபுரி பாஜக கிளைத் தலைவர் மோகன் என்பவருக்குச் சொந்தமான வெல்டிங் கடையில் மர்மநபர்கள் இரவில் பெட்ரோல் குண்டு வீசினர்.

பொள்ளாச்சியில் பொன்ராஜ், சிவா, சரவணகுமார் ஆகிய பாஜக நிர்வாகிகளின் கார்கள், ஆட்டோக்களும் பெட்ரோல் குண்டுக்கு இரையாகின. திருப்பூரில் பாஜக பிரமுகர் பாலு என்பவரது வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதேபோல் மதுரையிலும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் இல்லங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதேபோல் கன்னியாகுமரியில் மண்டைக்காடு அருகே பாஜக ஆதரவாளர் கல்யாண சுந்தரம் என்பவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் பைக்கில் வந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதனிடையே கோவையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கோயம்புத்தூர் விரைந்துள்ளார்.

x