நடிகை பத்மபிரியாவின் தொலைபேசி எண்ணை கேட்டு பிரபல சினிமா ஒளிப்பதிவாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இயக்குநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராமாபுரம் பாரதி சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்திருப்பவர் பிரபு@லக்ஷ்மி பிரபாகர்(52). சினிமா துறையில் 30 வருடங்களாக திரைப்பட ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் இவர் அயன், மகாநதி,வாலி, ரமணா, சுறா, முகவரி, காப்பான் உள்ளிட்ட பல இடங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2006 ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.சூர்யா என்பவர் தான் எழுதியுள்ள பாரதியார் பாடலில் நடிகை பத்மப்ரியாவை வைத்து ஒளிப்பதிவு செய்து தருமாறு கேட்டு கொண்டதன் பேரில் இருவரும் இணைந்து பாரதியார் பாடலை ஒளிப்பதிவு செய்து முடித்தனர்.. இதன்பின் இருவரும் நண்பர்களாக நெருங்கி பழகி வந்த நிலையில் கடந்த 2010 ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.சூர்யா தான் எழுதிய புத்தகத்தை நடிகர் பார்த்திபன் அவர்களை வைத்து வெளியிட உதவுமாறு லட்சுமி பிரபாகரிடம் கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குனர் ஏ.எல்.சூர்யா நடிகை பத்மபிரியாவின் தொலைபேசி எண்ணை கேட்டு ஒளிப்பதிவாளர் லட்சுமி பிரபாகரிடம் கடந்த நான்கு மாதங்களாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்..
நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணை ஒளிப்பதிவாளர் லட்சுமி பிரபாகர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த இயக்குனர் ஏ.எல்.சூர்யா, அவரின் மனை குறித்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த ஒளிப்பதிவாளர் லட்சுமி பிரபாகர் இது குறித்து ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் புகாரின் அடிப்படையில் போலீசார் இது குறித்து இயக்குனர் சூர்யாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இயக்குனர் சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் நடிகை பத்மாபிரியா, மற்றும் மோகன்லால் குறித்து அவதூறு கருத்துகைளை பதிவிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.