மாணவியிடம் அத்துமீறல்: காவலர் உள்பட இருவர் கைது


கைது

வேலியே பயிரை மேய்வது போல் புதுச்சேரியில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய காவலர் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் கலாச்சார விழா நடந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளனர். ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், நிகழ்ச்சி முடிந்து கல்லூரி வளாகத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தார்.அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்த மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டார்.

அந்த மாணவி அலறல் சத்தம் போட்டார். ஆனால் அங்கிருந்த யாரும் கண்டுகொள்ளாததால் மீண்டும் அந்த மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அந்த மாணவி கோரிமேடு காவல்நிலையத்தில் புகார்கொடுத்தார். போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்த போது இந்தக் குற்றச் சம்பவத்தில் கோரிமேடு காவல்நிலையத்தில் காவலராக இருக்கும் கண்ணன், அவரது உறவினர் சிவக்குமார்(20) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸார் இருவரையும் கைது செய்தனர். கண்ணன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

x