‘எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்கள்’ - புகாரளித்த தாய்க்கு காவல் நிலையத்தில் நடந்த கொடுமை


உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜில் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்க சென்ற தாயை, போலீஸ் அதிகாரியே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கன்னோஜில் தனது 17 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகார் அளிப்பதற்காக அவரின் தாயார் ஹாஜி ஷெரீப் போலீஸ் சௌகி காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். புகார் அளிக்க வந்த அந்த பெண்ணை காவல்நிலைத்தின் அவுட்போஸ்ட் இன்சார்ஜ் அனூப் மவுரியா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக பெண்ணின் புகாரின் அடிப்படையில் அதே காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ்காரரை கைது செய்துள்ளனர்.

ஹாஜி ஷெரீப் சௌகியின் பொறுப்பாளரான மவுரியா, இந்த வழக்கில் கையெழுத்திட வேண்டும் என்று கூறி, தனது வீட்டிற்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கச் சென்ற பெண்ணையே போலீஸ் அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

x