தேவாலயத்தில் சிறுவனுக்கு நடந்த கொடுமை: போக்சோவில் பாதிரியார் கைது


கேரளாவில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் 63 வயதான கத்தோலிக்க பாதிரியார் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கேரள மாநிலம் வரபுழா அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பரவூரைச் சேர்ந்த ஜோசப் கொடியன் (63) இருந்தார். இவர் தேவலாயத்துக்கு வந்த சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தனக்கு நடந்த கொடுமையை சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், பாதிரியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

x