சலூனுக்கு சென்ற சிறுமிக்கு நடந்த விபரீதம்: ஊழியர் மீது பாய்ந்தது போக்சோ


பஞ்சாப் மாநிலம் குர்கானில் சலூனில் தலைக்கு மசாஜ் செய்யும் போது , 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக சலூன் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குர்கானில் உள்ள செக்டார் 56 பகுதியில் புதன்கிழமையன்று நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர். ஆரம்பத்தில் பள்ளி மாணவியான அந்த சிறுமி இந்த விஷயத்தைப் பற்றி பேசாமல் இருந்தார். ஆனால் பின்னர் அதைத் தன் தாயிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையை அணுகி குற்றவாளிகள் மீது புகார் அளித்தனர். அதன்படி, போக்சோ சட்டத்தின் கீழ் சலூன் ஊழியர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்

இது தொடர்பாக பேசிய செக்டார் 56 காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அமித் குமார், "குற்றம் சாட்டப்பட்டவர் அதை ஒப்புக்கொண்டார், அதன்பின் அவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. சட்டப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

x