ராஜபாளையம் : வனத்துறையினருடன் இணைந்து போலீஸார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டை!


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தைத் தொடர்ந்து ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனத்துறையினருடன் இணைந்து போலீஸார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டை நடத்தினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் மதுவிலக்கு போலீஸார் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதன்படி ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் சம்பந்தமாக வனத்துறையினருடன் இணைந்து போலீஸார் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராய ஊறல், வடித்தல் குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய மதுவிலக்கு போலீஸார், “மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளில் கடந்த காலங்களில் கள்ளச்சாராய வழக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஒரு வாரமாக தீவிர ரோந்து பணி நடைபெற்றது. ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கோட்டமலை பீட், கவுண்டன்கேணி, செல்லங்கல், கோட்டைமலை கருப்பசாமி கோயில் உள்ளிட்ட வனப் பகுதிகளில் கள்ளச்சாராய வடித்தல் தொடர்பாக வனத்துறை உடன் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்றனர்.

x