சத்தீஸ்கர் மாநிலம் பலோதாபஜார் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை 76 வயதுடைய நபர் உட்பட இருவர் 10 ரூபாய் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகளில் இருந்து சிறுமி வெளியில் வருவதை. பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பார்த்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து சிறிமியிடம் அவரின் பெற்றோர் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சிறுமி வசிக்கும் அதே பகுதியில் வசிக்கும் குஞ்ச்ராம் ( வயது 76) என்பவர் ஒவ்வொரு முறையும் 10 ரூபாய் தருவதாக உறுதியளித்து தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குஞ்சராமுக்குத் தெரிந்த ரமேஷ் என்பவரும் இதே போல பணம் தருவதாகச் சொல்லி சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குஞ்ச்ராம் வர்மா (76) மற்றும் ரமேஷ் வர்மா (47) ஆகிய இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் ஜூலை 31 அன்று கைது செய்யப்பட்டதாக பலோடபஜார் கோட்வாலி காவல் நிலைய அதிகாரி யதுமணி சித்தார் தெரிவித்தார். வயிற்று வலி இருப்பதாக கூறிய அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.