சமூக வலைத்தள படங்களை மார்பிங் செய்து 22 பெண்களுக்கு மிரட்டல்: இளைஞர் கைது


கைது

மும்பையில் 22 க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பிங் ஆபாச வீடியோக்களை உருவாக்கி பதிவேற்றியதற்காக 19 வயது இளைஞனை குஜராத்தில் காவல்துறை கைது செய்துள்ளது.

பெண்களின் சமூக வலைத்தள படங்களை பயன்படுத்தி, ஆபாச மார்பிங் படங்களை உருவாக்கி பணம் கேட்டு மிரட்டிய 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய மும்பை துணை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாட்டீல், “குற்றம் சாட்டப்பட்ட நபர் பெண்களின் சமூக ஊடக கணக்குகளிலிருந்து படங்களைப் எடுத்து பின்னர் அதிலிருந்து ஆபாசமான கிளிப்களை சேர்த்து உருவாக்கினார். இதுபோன்ற மார்பிங் வீடியோக்களை வெளியிட்டு 22 பெண்களை மிரட்டியுள்ளார். அதன் பின்னர் சமூக ஊடகங்களில் இருந்து அந்த வீடியோக்களை அகற்றுவதற்காக அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்” என தெரிவித்தார்

x