மாணவி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம், பெரியார் பல்கலைக் கழக வேதியியல் துறையின் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் கோபி. இவர் அதே பல்கலைக் கழகத்தின் பதிவாளராக (பொறுப்பு) பணிபுரிந்து வருகிறார். வேதியியல் துறையில் ஆய்வு மாணவி ஒருவரை விடுமுறை நாளான நேற்று பல்கலைக் கழகத்திற்கு வரவழைத்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை சிலர் தாக்கியதாகக் கோபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதோடு காவல் நிலையத்திலும் இதுகுறித்து கோபி புகார் அளித்திருக்கிறார்.
மேலும், மாணவி தரப்பிலும் பல்கலைக் கழக பதிவாளர் கோபி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மாணவியின் பாலியல் புகாரையடுத்து சேலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பதிவாளர்(பொறுப்பு) கோபி பொய் புகார் அளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாணவியின் புகாரின் அடிப்படையில் கோபி மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரைக் கைது செய்தனர்.