100-க்கும் மேற்பட்டோரிடம் செல்போன் ஆப் மூலம் நூதன முறையில் மோசடி செய்தவர் கைது


புதுச்சேரி: செல்போன் ஆப் ஒன்றின் மூலம் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் பண மோசடி செய்த சென்னை நபரை, புதுச்சேரி சைபர் க்ரைம் போலீ ஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி பாகூரைச் சேர்ந்தவர் அஸ்வின். இவர் கோயில் திருவிழாவுக்காக தவில் மற்றும் நாதஸ்வரம் வேண்டுமென்று செல்போன் ஆப் ஒன்றில் தேடியபோது, ஒரு நபர் தன்னிடம் தவில், நாதஸ்வரம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து அஸ்வின், அதற்கான முன்பணமாக ரூ.22 ஆயிரம்அனுப்பியுள்ளார். ஆனால், அந்தநபர் நாதஸ்வரம், மேளத்தை அனுப்பவில்லை. அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அஸ்வின், இதுகுறித்து புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

சென்னையை சேர்ந்தவர்... இதில், சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ஜெயக்குமார்(52) என்பவர், அஸ்வினிடம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை விரைந்த சைபர் க்ரைம் போலீஸார், நேற்று முன் தினம் இரவு அவரைக் கைது செய்து, புதுச்சேரி அழைத்து வந்தனர். விசாரணையில் புதுச் சேரி மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரி டம், பல்வேறு பொருட்களை ஆன் லைனில் அனுப்பி வைப்பதாகக் கூறி, லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

கைதான ஜெயக்குமாரிடம் இருந்த 30-க்கும் மேற்பட்ட வங்கிப் புத்தகங்கள், காசோலைகள், 20 சிம்கார்டுகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் ஜெயக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இணைய வழி விளம்பரங்களை.. “இணைய வழியில் வரும் விளம்பரங்களை நம்பி, பணம் அனுப்ப வேண்டாம். அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகு, பணம் செலுத்துங்கள்” என்று புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

x