ஆந்திராவில் பப்ஜி விளையாட்டில் தோற்றதால் நண்பர்கள் கிண்டல் செய்ததால் அவமானமடைந்த 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், மசூலிபட்டினத்தை சேர்ந்தவர் சாந்திராஜ். காங்கிரஸ் கட்சி தலைவராவார். இவரது 16 வயது மகன் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையானமாக கூறப்படுகிறது. நேற்று தனது நண்பர்களுடன் ஆன்லைனில் அவர் பப்ஜி விளையாடியுள்ளார். இதில் தோல்வியடைந்தார். இதனால் அவரை நண்பர்கள் கேலி செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அந்த சிறுவன் வீட்டிற்கு வந்து மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீஸார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை கேலி செய்தவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பப்ஜி விளையாட்டால் சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.