அதிகாலையில் தூங்கிய ஓட்டுநர்... சாலையில் கவிழ்ந்த பேருந்து: பறிபோன 5 பேரின் உயிர்கள்


அதிகாலையில் தனியார் பேருந்து கவிழுந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

ஒடிசாவில் இருந்து நேற்றிரவு தனியார் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை காக்கிநாடா அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையின் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், பேருந்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 35 பேரில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் பேருந்து ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த அனைவரும் ஒடிசாவை சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

x