'கந்துவட்டி ஆபரேஷன்' அதிரடியாக துவங்கியது: ஈரோட்டில் ஒருவர் கைது


கந்துவட்டி கேட்டு மிரட்டிய ஒருவரை ஈரோட்டில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கந்துவட்டிக் கொடுமையால் தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கந்துவட்டிக் கொடுமையால் கடலூரைச் சேர்ந்த காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழகத்தில் கந்து வட்டி புகார்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க கந்துவட்டி ஆபரேஷன் நடவடிக்கையை காவல்துறை டிஜிபி சைலேந்திபாபு துவக்கி வைத்தார்.

இதன் முதல் நடவடிக்கையாக ஈரோட்டில் கந்துவட்டி புகாரில் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வீரப்பன் சத்திரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசிடம் அப்பகுதியைச் சேர்ந்த இறைச்சிக்கடை நடத்தும் முகமது ஷெரீப் 1.50 லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கியிருந்தார். வட்டித்தொகை கட்டி விட்டதாகவும், தற்போது திருநாவுக்கரசு 3.50 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் போலீஸில் முகமது ஷெரீப் புகார் அளித்தார். இப்புகாரை விசாரித்த போலீஸார், திருநாவுக்கரசை கைது செய்தனர். கந்து வட்டி புகார்கள் மீது நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்படும் என ஈரோடு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

x