பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்த தலைமையாசிரியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார் (43). இவர், ஓமலூர் அருகேயுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு இவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து, ஓமலூர் போலீஸார் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தலைமை ஆசிரியர் விஜயகுமார், மாணவிக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் விஜயகுமாரை ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.