ஹைதராபாத்தில் காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சட்டப்பேரவை உறுப்பினர் மகன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதிக்கு கடந்த 28-ம் தேதி 17 வயது சிறுமி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். மாலை 4 மணியளவில் வீடு திரும்ப வெளியே வந்த அவரை காரில் வீட்டில் விடுவதாக 6 பேர் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல்
பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் காரில் அந்த சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில் 5 பேர் சிறுவர்கள் என்ற செய்தி ஹைதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரின் மகன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இவரும் சிறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.