7 வயது சிறுமியிடம் வடமாநில இளைஞர் அத்துமீறல்: சென்னை ரயில் நிலையத்தில் பரபரப்பு


ராஜஸ்தானைச் சேர்ந்த தீபக்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கழிவறைக்குச் சென்ற 7வயது சிறுமியிடம் ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து கொண்ட வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவிலிருந்து தானாப்பூர் செல்லும் ரயிலில் பிஹாரைச் சேர்ந்த 7வயது சிறுமி பயணம் செய்துள்ளார். நேற்று மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை ஐந்துக்கு ரயில் வந்தது. அப்போது சிறுமி அங்குள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த இளைஞர் ஒருவர், சிறுமியிடம் ஆபாசமாகவும், அத்துமீறவும் முயற்சி செய்துள்ளார். மேலும் நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

ஆனால், உடனே சிறுமி தனது தந்தையிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது தந்தை, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரிடம் புகார் அளித்தார். இதன் பேரில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தீபக்(30) என்பதும், கட்டுமானப் பணி செய்து வருவதும் தெரிய வந்தது.

x