நண்பரின் கண்முன்னே பிரிட்டன் சுற்றுலா பயணிக்கு கோவாவில் நேர்ந்த கொடூரம்


கோவாவில் உள்ள அரம்போல் கடற்கரைக்கு அருகே பிரிட்டன் பெண் சுற்றுலா பயணியை, மசாஜ் செய்வதாகக் கூறி அவரது நண்பரின் கண்முன்னே ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த அந்தப் பெண் காவல் துறையில் அளித்த புகாரில், அரம்போல் கடற்கரையின் ஸ்வீட் வாட்டர் ஏரியின் அருகே மசாஜ் செய்வதாகக் கூறி ஒரு நபர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் ஜூன் 2-ம் தேதி நடந்ததாகவும், பிரிட்டனில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் உதவியை நாடிய பின்னர் திங்களன்று அந்தப் பெண் பெர்னெம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புகாரைப் பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் இன்ஸ்பெக்டர் விக்ரம் நாயக் தலைமையிலான பெர்னெம் போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். பிரிட்டன் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வின்சென்ட் டிசோசா (32) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். சட்டவிரோதமாக மசாஜ் சேவைகள் வழங்கிவரும் வின்சென்ட் இதற்கு முன்னர் ஒரு பள்ளியில் நூலகராகப் பணிபுரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

x