ஆர்த்தி ஸ்கேன் சென்டர்களில் வருமானவரித்துறை அதிரடி ரெய்டு!


தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டர்களில் வருமான வரித்துறையினரின் சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் மையங்கள் இயங்கி வருகின்றன. இன்று காலை 7.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டர், மருத்துவர் வீடுகள், அவர்களது அலுவலகங்கள் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

வருமானவரி ஏய்ப்பு காரணமாக ஏற்பட்ட புகாரின் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

x