கோயில் பெயரில் பொதுமக்களிடம் வசூல் வேட்டை: சிக்கிய பாஜக ஆதரவு யூடியூபர் கார்த்திக் கோபிநாத்!


அண்ணாமலையுடன் கார்த்திக் கோபிநாத்

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் பெயரில் வசூல் வேட்டை நடத்திய யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள அருள்மிகு மதுர காளி அம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் அரவிந்தன் என்பவர், சென்னை ஆவடி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்ற கொடுத்துள்ளார். இந்தப் புகாரில், சிறுவாச்சூரில் உள்ள அருள்மிகு மதுர காளி அம்மன் திருக்கோயிலின் செயல் அலுவலராக தான் பணிபுரிந்து வருவதாக சென்னை முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் (33) என்பவர், இளையபாரதம் என்ற பெயரில் நடத்தி வரும் யூடியூப்பில் Millap fund raiser site என்பதன் மூலமாக அருள்மிகு மதுர காளி அம்மன் திருக்கோயிலின் உப கோயில்களில் உள்ள பழுதடைந்த சிலைகளை புணரமைப்பதற்காக வேண்டி இந்து அறநிலையத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் பொதுமக்களை ஏமாற்றி நிதி திரட்டி அதை தனது சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

அமித் ஷாவுடன் கார்த்திக் கோபிநாத்

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர், வழக்கு பதிவு கார்த்திக் கோபிநாத்தை இன்று கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டிருப்பது அவரது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளார் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை. இதற்கிடையே பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் கைது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பக்கத்தில், கார்த்தி கோபிநாத்தை போலீஸார் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்திருப்பதாகவும், பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் குழு அவருக்கு ஆதரவாக இந்த வழக்கை எதிர் கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

x