லாரிகளுக்கு நடுவே அப்பளம் போல் நொறுங்கிய கார்... பறிபோன பேரனின் உயிர்: தாத்தா, 2 பேரன்கள் அட்மிட்


இரண்டு லாரிகளுக்குள் சிக்கிக் கொண்ட கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தாத்தா, மற்ற இரண்டு பேரன்கள் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை பிரஸ் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தன்னுடைய பேரன்களுடன் கோடை விழாவை கொண்டாட கேரளாவின் மலப்புழாவிற்கு சென்று காரில் திரும்பிக் கொண்டிருந்தார். கோவை மாவட்டம், மதுக்கரை அருகே கார் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி காரை இழுத்துக் கொண்டு சென்றது.

அப்போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் இரண்டு லாரிகளுக்கும் நடுவில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த சிறுவன் யுவன் கிரிஷன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 2 சிறுவர்கள் மற்றும் அவர்களுடைய தாத்தாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போக்குவரத்து காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்ற 3 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த விபத்து குறித்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

x