அடகுக்கடையில் ராமேஸ்வரம் மீனவப்பெண்ணின் நகை: பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்


ராமேஸ்வரம் அருகே கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட மீனவப்பெண்ணின் நகை அடகுக்கடையில் வைக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே வடகாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண் நேற்று முன்தினம் கடல் பாசி சேகரிக்க சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் இறால் பண்ணையில் வேலை செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மீனவப்பெண் அணிந்திருந்த மெட்டி, கழுத்தில் இருந்த தங்க நகைகளை ராமேஸ்வரம் நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில் அடகு வைத்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்தி, ராமேஸ்வரம் நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில் இன்று விசாரணை நடத்தினார். அத்துடன் கைது செய்யப்பட்ட வட மாநிலத்தவர்கள் பணியாற்றிய இறால் பண்ணை மற்றும் மீனவப் பெண்ணை படுகொலை செய்யப்பட்ட இடங்களில் அவர் தீவிர ஆய்வு நடத்தினார். இந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x