சீறிப் பாய்ந்த லாரி... தூக்கி வீசப்பட்ட பேராசிரியை: கணவர் கண்முன்னே பறிபாேன உயிர்


மின்னல் வேகத்தில் வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பேராசிரியை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் கண்முன்னே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சென்னையை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகர் 20-வது தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி பூஜா (24) மாதனாங்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். பணி முடிந்து நேற்று மாலை கல்லூரியில் இருந்து மனைவி பூஜாவை தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து வந்தார் அருண்குமார்.

புழல் போலீஸ் நிலையம் எதிரே ஜி.என்.டி. சாலையில் அவர்கள் வந்தபோது, மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த லாரி, இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட பேராசிரியை பூஜா, கணவர் கண்முன்னே உயிரிழந்தார். காயங்களுடன் அருண்குமார் உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து மாதவரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மணலியை சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

x