‘எங்களைக் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள்… உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்’: மூவர் தற்கொலையில் சிக்கிய அதிர்ச்சி கடிதங்கள்!


டெல்லியில் தாய், 2 மகள்கள் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 9 கடிதங்களில் இருந்த தகவல்கள் போலீஸாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

டெல்லியில் உள்ள வசந்த விஹார் பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர் மஞ்சு(54). இவரது மகள்கள் அன்ஷிகா (27), அங்கு (25). இவர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை(மே 21) தற்கொலை செய்து கொண்டனர். வீட்டின், கதவு ஜன்னல்கள் முழுவதும் பிளாஸ்டிக் கவர் கொண்டு டேப் போட்டு ஒட்டி கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டுள்ளனர். அத்துடன் விறகு அடுப்பில் தீ வைத்து புகையை உருவாக்கியுள்ளனர். இதனால் சிலிண்டர் வாயுவுடன் சேர்ந்து கார்பன் மோனாக்சைடு விஷவாயுவாக மாறியுள்ளது. அதை சுவாசித்த தாய் மஞ்சு, அவரது மகள்கள் அன்ஷிகா, அங்கு ஆகியோர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மஞ்சுவின் கணவர் ஏப்ரல் 2021-ல் கரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் மஞ்சும், அவரது இரண்டு மகள்களும் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் நிதி நெருக்கடியிலும் இருந்துள்ளனர். இதனால் மூவரும் தற்கொலை செய்துள்ளனர். அவர்கள் சாவதற்கு முன்பு 9 கடிதங்களை எழுதியுள்ளனர். அவற்றைப் படித்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “தாய் மற்றும் அவரது 2 மகள்கள் தற்கொலை செய்வது குறித்து பல மாதங்களாக திட்டமிட்டுள்ளனர். யாரும் தங்களைக் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக கடினமான முறையில் எப்படி தற்கொலை செய்து கொள்வது என யூடியூப் பார்த்துள்ளனர். தற்கொலை செய்வதற்கு முன்பு ஒருவர் எழுதி வீட்டின் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த கடிதத்தில்,' கார்பன் மோனாக்சைடு வீடு முழுவதும் உள்ளது. எங்களைக் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் நாங்கள் வாழ விரும்பவில்லை. எங்களைக் காப்பாற்றுவதால் அது எங்கள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். அது வாழ்வது மற்றும் சாவதை விட கொடூரமானது. கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். எங்களைக் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள். உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்' என அதில் எழுதியிருந்தது" என்று கூறினர். யூடியூப் பார்த்து தாய், அவரது 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x