ஆன்லைனில் நச்சுப்பவுடர் ஆர்டர்… அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கிடந்த தாய், மகள்கள் : போலீஸ் அதிர்ச்சி


ஆன்லைனில் நச்சுப்பவுடர் ஆர்டர் செய்து அதை சுவாசித்து தாய், 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

டெல்லியில் உள்ள விஹார் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர் மஞ்சு(54). இவரது மகள்கள் அன்ஷிகா (27), அங்கு (25). இவர்கள் வீட்டின் கதவு திறக்கப்படாமலே இருந்ததால் பக்கத்து வீட்டுக்கார்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது தொடர்பாக அவர்கள் போலீஸாருக்கு நேற்று மாலை தகவல் தெரிவித்தனர். போலீஸார் வந்து மஞ்சுவின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மஞ்சு, அன்ஷிகா, அங்கு ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் எழுதிய கடிதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
விசாரணையில், மஞ்சுவின் கணவர் ஏப்ரல் 2021-ல் கரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் மஞ்சும், அவரது இரண்டு மகள்களும் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக வீட்டிற்குள் நச்சுப்புகையை ஏற்படுத்தி அதன் மூலம் உயிரிழக்க முடிவு செய்தனர். இதற்காக ஆன்லைன் மூலம் நச்சுப்பவுடரை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். கரியால் தீமூட்டி அந்த பவுடரைப் போட்டு அந்த புகையைச் சுவாசித்து அவர்கள் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அத்துடன் இந்த நச்சுப்புகை வெளியே பரவக்கூடாது என்பதற்காக ஜன்னல் கண்ணாடிகளை டேப்பால் சீல் வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

x