திருவாரூர் தெப்பத் திருவிழாவின்போது கமலாலய குளத்தில் குளித்த ராஜஸ்தான் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். குளத்தில் மாயமான ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் தெப்பத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்தநிலையில், தெப்பம் உலா வரும் கமலாலய குளத்தில் ஆட்டோ ஓட்டுநர் குளிக்கச் சென்றுள்ளார். நீரில் மூழ்கிய அவர் திடீரென மாயமானார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, குளத்தின் கீழ் கரையில் குளித்துக் கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி உஸ்பான் மாயமானார். 2 மணி நேர தீவிர தேடுதலுக்கு பிறகு சிறுமியை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர். இரவு நேரம் ஆனதால் மீட்பு பணியை தீயணைப்பு வீரர்கள் நிறுத்தி இன்று காலை முதல் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, குளத்தில் சிறுமி உயிரிழந்ததால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு திட்டமிட்டப்படி தெப்பத் திருவிழா நடைபெற்றது.